மீண்டும் பரபரப்பு! நீதிமன்றில் விசாரிக்கப்படும் மஹிந்த தொடர்பான விடயம்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதனை இடை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு, சவால் விடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு, சட்டத்திற்கு எதிராக மற்றும் சிக்கலாக உள்ளமையினால் அந்த உத்தவை நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனு மஹிந்த தரப்பினரால் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.