நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன் அதிரடி

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியை கவிழ்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் எந்த நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் அந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்.

இலங்கையின் அரசியல் துவாரத்தை சர்வதேச சமூகத்திற்கு ஒரே இரவில் காட்டிக் கொடுக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தைப் பெறலாம்.

ஆனால், சிங்கள மக்களுக்கு தமிழர் தரப்பின் மீது நம்பிக்கைய ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் வேலை செய்து கொண்டு, பையிலிருக்கும் கத்தியை எடுத்து அடிக்கடி வெளியே காட்டி கொண்டிருந்தால் அவர்கள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அவநம்பிக்கையோடும் அச்சத்துடனும்தான் பார்த்துக் கொண்டிருப்பர்.

ஆக, எங்களிடமுள்ள பலத்தையே பலவீனமாகவும் முன்னிறுத்திவிட கூடாது என குறிப்பிட்டுள்ளார்.