தமிழர்களுக்கு மொழியுரிமையை வழங்கியிருந்தால் போர் ஏற்பட்டிருக்காது

Report Print Rakesh in அரசியல்

1956இல் தமிழ் மக்கள் மொழியுரிமையை தமக்கு தருமாறு கேட்டிருந்தனர். அதனை வழங்கியிருந்தால் கொடூரமான போரை நோக்கி நாடு ஈடுபட்டிருக்காது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தாமதமாகியேனும், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படும்.

வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில் அரசமைப்பு தயாரிக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை.

சுதந்திரம் கிடைத்த பின்னர், 60 வருட காலத்தில் அரசமைப்பு வகுப்பதில் தமிழ் கட்சிகள் கலந்து கொள்ளாமை பாரிய பிரச்சினையாகும். இருப்பினும், தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு புதிய அரசமைப்புக்கு பெற்று கொள்ளப்பட்டுள்ளது. இது சாதகமான நிலைமையாகும்.

இதேவேளை, பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்கு முக்கிய இடத்தை வழங்கி புதிய அரசமைப்பைத் தயாரிப்போம் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.