மக்களின் ஆணை இன்று என்னை அமைச்சராக்கியுள்ளது: அப்துல்லாஹ் மஹ்ரூப்

Report Print Mubarak in அரசியல்

திருகோணமலை மாவட்ட மக்கள் வழங்கிய ஆணை இன்று தன்னை அமைச்சராக்கியுள்ளதாக அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கந்தளாயில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் கம்பெரலிய வேலைத் திட்டங்களினூடாக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

என்னுடைய துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சை கொண்டும் அதே போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரின் கைத்தொழில் வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்கான றிஸாத் பதியுத்தீனின் அமைச்சை கொண்டும் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற காலத்தினுள் சேவைகளை மேற்கொள்வேன்.

கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வருடம் ஒரு கோடிக்கு கூடுதலான பணம் அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எமது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு எதிர்கால தேர்தல்களில் எமது கட்சிக்கு ஒரு சவாலாக அமையும்.

எனவே தான் மிகுதி இருக்கின்ற காலத்தில் திட்டமிட்டுள்ள அனைத்து மக்களின் தேவைகளும் நிறைவு பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.