இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பு

Report Print Malar in அரசியல்

பிலிப்பைன்ஸிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவை இன்று சந்திக்க உள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டை சென்றடைந்துள்ளார்.

இதன்போது மணிலா நகரில், நினோ அக்குயுனா விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் வரவேற்றுள்ளனர்.

இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் செல்லவுள்ளதுடன் அதன் தலைவர் தகெஹிக்கோ நகாப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் 1967ஆம் ஆண்டில் ஆரம்பமானதுடன், 58 வருடங்களில் நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு, பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers