நல்லாட்சி எண்ணக்கருவை கைவிட்டு எதிர்காலத்தில் அரசியல் செய்வோம்

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி எண்ணக்கருவை கைவிட்டு அரசியலில் ஈடுபடுவது அத்தியாவசியம் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் நாட்டில் மேற்கொண்டு வரும் அபிவிருத்திகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அபிவிருத்தி நடைபெறுவதாக தெரிந்தாலும் மக்கள் உணரும்படியான எதுவும் தெரியவில்லை என சிலர் கூறுகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தை போல் அபிவிருத்திக்காக பெருந்தொகை நிதியை எந்த அரசாங்கமும் ஒதுக்கியதில்லை.

எனினும் அவை ஊடகங்களில் வெளியாவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நல்லாட்சி செய்தோம். எதிர்காலத்தில் அரசியல் செய்வது அத்தியாவசியமானது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.