மருத்துவ ஆய்வுகூட வசதியை ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை

Report Print Mubarak in அரசியல்

அம்பாறை - ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட வசதியை ஏற்படுத்தித் தருமாறு சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமிடம் கோரப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் இன்று பொதுமக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில்,

மத்திய மருந்தகமும், மகப்பேற்று மருத்துவமனையும் என்ற தரத்தில் இருந்த ஒலுவில் வைத்தியசாலை 2004ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

எனினும் இந்த வைத்தியசாலையில் நீண்ட காலமாக மருத்துவ ஆய்வு கூட வசதி இல்லாமையால் நோயாளர்களும், கர்ப்பிணி தாய்மார்களும் சிறுநீர் மற்றும் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதற்காக தனியார் மருத்துவ ஆய்வு கூட நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பண விரயம் ஏற்படுவதோடு, மருத்துவ அறிக்கையைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.

எனவே மருத்துவ ஆய்வு கூட வசதியை ஏற்படுத்தி அதற்குரிய தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், ஈ.சீ.ஜீ தொழிநுட்பவியலாளர் ஆகியோரையும் நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.