அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தை வெற்றி! மங்கள தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டீன் லேக்குரொட் மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பலனளிக்க கூடியதாக அமைந்தது என அமைச்சர் மங்கள சமரவீர அ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் அது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடனான பேச்சுவார்த்தையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்க உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.