பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வாவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இது சம்பந்தமாக ஒலிப்பதிவு தகடுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேற்படி கொலை சதித்திட்டம் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்வது தொடர்பாக நாலக டி சில்வா பேசியதாக கூறப்படும் உரையாடலின் பதிவுகள் கிடைத்துள்ளன. இதனை அடிப்படையாக கொண்டே அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.