விமல், நாமல் மற்றும் சஷி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்ச ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக கூறியிருந்தார். இது சம்பந்தமான வாக்குமூலம் பெறவே இவர்களை அழைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் என்பது ஒரு கட்டுக்கதை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து அரசாங்கத்தை மாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த கொலை சதித்திட்டமே தனது இந்த தீர்மானத்திற்கு காரணம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers