அமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் அனுருத்த பாதெனிய: ராஜித சேனாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய என்றாவது ஒரு நாள் அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகிறார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி ஒன்றின் கைப்பாவையாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாறியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பொய்யான தகவல்களை கூறியுள்ளனர்.

அமைச்சு ஒன்றுக்கு எதிராக எப்படி ஆணைக்குழுவை நியமிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான் கேள்வி எழுப்பினேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவை நியமிக்க ஜனாதிபதி இணங்கியதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.