வடக்கு ஆளுநரின் நியமனம் ஜனாதிபதியின் சிறந்த தீர்மானம்! நாக விகாரையின் விகாராதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

கலாநிதி சுரேன் ராகவனை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானம் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மிகஹாஜ்துரே விமல தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து யாழ் ஆயரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். நல்லூர் கந்தசாமி கோயில், நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆகியவற்றுக்கு சென்ற ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.