தனது புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாகையை திறந்து வைத்த சுமந்திரன்!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசாங்கத்தில் பங்காளிகள் அல்ல என கூறிவரும் நிலையில் அரசாங்கத்தின் ''கம்பெரலிய'' திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வேலை திட்டங்களுக்கான பெயர் பலகைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கி தேசிய முன்னணி அரசாங்கத்தினால் கம்பெரலிய திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் சகல பாகங்களிலும் கிராமமட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் அந்தப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக விசேடமாக செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் மேற்படி கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அதனை சிபார்சு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பருத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது புகைப்படமும் பொறிக்கப்பட்ட பதாகையை திரைநீக்கம் செய்துள்ளார்.

இதேபோல் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒரு வேலைத் திட்டம் தொடர்பான பதாகை வைக்கப்படும்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களே பிரசுரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டு பதாகைகள் வைக்கப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவி யை பெறமாட்டோம் எனவும் அரசாங்கத்தின் பங்காளிகளாக தாம் இல்லை என கூறினாலும் இவ்வாறான பதாகைகள் கூட்டமைப்பின் கருத்தை மறுதலிப்பதாகவே உள்ளது.