புதிய கட்சியில் இணைகிறார் கோத்தபாய! அடுத்தகட்ட நகர்வு ஆரம்பம்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது.

பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்ட பின்னர், அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனிடையை கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சகல மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.