புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை: மகிந்த விளக்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவா மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் இந்த அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்படவிருந்தது. உத்தேச வரைவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். சிலர் அவ்வாறு அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் உருவாக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

அரசியல் அமைப்பில் திருத்தம் செய்வதில் உள்ள ஆபத்துக்களை நாம் அறிவோம், இந்த அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது.

அரசியல் அமைப்பு மாற்றங்களைச் செய்யும் உரிமை இந்த நாடாளுமன்றிற்கு கிடையாது. அரசியல் அமைப்பு குறித்து நாட்டு மக்களே அச்சம் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.