அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! பிரித்தானியா வலியுறுத்தல்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை, இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்த விடயம் பற்றி அந்நாட்டு வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சபாநாயகரை வரவேற்றதாகவும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.