மைத்திரிக்கும் ரணிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்!

Report Print Kamel Kamel in அரசியல்

தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல்களை துரித கதியில் நடத்துவதற்காக நாடாளுமன்றில் தீர்வு ஒன்றை எட்டுமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவில் அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய குறிப்பு ஒன்றும் இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்பொழுது நிலவி வரும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.