சர்ச்சையாக மாறியுள்ள விவகாரம்! கேள்வி கேட்கத் தயாராகும் சம்பந்தன்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த வாரம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுவருகின்றனர்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாநியமனத்துக்கு, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டியவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு, அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சினை எழுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் ஒருவரை, ஜனாதிபதி உயர் பதவிக்கு நியமித்திருப்பது குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அடுத்த அமர்வில் இந்தப் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.