மகிந்தவின் ஆதரவு வேண்டும்! கூட்டமைப்பு தயாராக இருக்கிறது- சுமந்திரன் வேண்டுகோள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இரண்டாம் இணைப்பு

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும்.

வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வரவேற்பு நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதாவது கொடுக்கப்படும் அதிகாரங்கள் குறித்து மத்திய அரசில் சட்டம் இயற்ற முடியாதவாறு அமைய வேண்டும். இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதனால்தான் நாங்கள் இதனை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம்.

ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட எமது சமூகத்தில் அதிகமாக இருக்கின்றது.

இங்கு ஜனநாயகம் மீறப்படுகின்றபோது அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டிலே ஜனநாயகம் மீறப்படுகின்றபோது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவரது கடமையாகும்.

நாட்டில் அரசியலமைப்பினைக் கொண்டுவரும் போது எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வரவேற்பு நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது.

இதன் போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக சுமந்திரன் அழைத்து வரப்பட்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுமந்திரன்,

அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தமது பங்களிப்பை வழங்க வேண்டும். அந்த பணிக்காக அவர் முன்வர வேண்டும்.

அரசியல் அமைப்பு விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சி குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை முழுமையாக இணைத்துக்கொள்வதற்கும் கூட்டமைப்பு தயாராக இரு்ககின்றது என்றார்.


Latest Offers