இலங்கை இரண்டாக பிளவடைகின்றதா? அமைச்சர் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சியினர் இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்கள் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பானது நாட்டை பிளவுபடுத்தும் என்றும், சமஷ்டியை பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கம் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அமைச்சர்,

எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை.

கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது நாட்டை ஐக்கிய படுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது, ஆனால் இந்த ஆவணம் நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

அவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன. அத்தகைய குழுக்கள் சிங்கள சமுதாயத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிளும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளும் ஈடுபட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்க்கட்சி திசை திருப்ப முயற்சி செய்கின்றன என்றார்.