உள்ளூர் அதிகார சபைகளை தரமுயர்த்த விசேட கூட்டம்

Report Print Mohan Mohan in அரசியல்

புதிய உள்ளூர் அதிகார சபைகளை ஸ்தாபித்தல் மற்றும் தற்போது உள்ள உள்ளூர் அதிகார சபைகளை தரமுயர்த்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது கரைத்துறைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துதல் மற்றும் ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கு தனித்தனியான பிரதேச சபைகளை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் காலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.