வடக்கு மக்களை இலக்கு வைத்துள்ள ரணில்! இது அவரின் தந்திரம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து தான் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசியமைப்பு தொடர்பாக எதிர்க் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பின் மூலமாக நாட்டை பிளவுபடுத்தி, சமஷ்டியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது என்று குறிப்பிடும் எதிர் தரப்பினர், ரணில் விக்ரமசிங்கவும் நாட்டை மேற்குலகிற்கும், தமிழ் மக்களிடமும் பிரித்துக் கொடுக்க முயற்சிக்கின்றது என்று மகிந்த தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவித்த அவர்,

தற்சமயம் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே முயற்சிக்கிறார்.

அடுத்தவரும் தேர்தல்களில் வடக்கினை மையப்படுத்தி, அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திரத்தை வகுத்துக் கொள்கின்றார் என்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது நாட்டை ஐக்கிய படுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது, ஆனால் இந்த ஆவணம் நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

அவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன. அத்தகைய குழுக்கள் சிங்கள சமுதாயத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிளும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளும் ஈடுபட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்க்கட்சி திசை திருப்ப முயற்சி செய்கின்றன என்றார்.