மகிந்த அரசாங்கத்தில் பெற்ற ஒரு பில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது!

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது 2014ஆம் ஆண்டு பெறப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடன் நேற்று மீளவும் அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்தும் இதுபோன்ற பல கடன்களைத் தருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தக் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதை நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை அரசாங்கம் பேணி வருகிறது.

அத்துடன், பரிமாற்றங்கள், நட்புநாடுகளின் தவணைக்கடன்கள், அனைத்துலக பிணைப் பத்திரங்களின் மூலம் கடன்களைப் பெற்று, வெளிநாட்டு நாணயக் கையிருப்பை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.