பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள காணொளி! அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

Report Print Murali Murali in அரசியல்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும், சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் ​தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது. அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த காணொளி வெளியானதை தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

“சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தலைமையில் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி வெளியானதை தொடர்ந்து இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த திங்கட்கிழமைக்கு முன்னதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹவுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.