மைத்திரி - மகிந்தவின் கைகளில் முடிவு! கட்சி உறுப்பினர்களின் வாய்க்கு பூட்டு

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கூறுகின்றனர். சிலர் கோத்தபாய ராஜபக்சவே வேட்பாரள் என்கின்றனர்.

இதனால், கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளே அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கூட்டணி தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதும் ஜனாதிபதி இதுவரை அதுதொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

எந்த தேர்தல் நடந்தாலும் அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகம்கொடுக்க இருக்கின்றோம்.

ஆகையினால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எமக்குப் பிரச்சினையில்லை. எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே எமது சவாலாகும்.

கூட்டணி அமைத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் போது தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கட்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers