இது கோத்தாவின் வேலை! நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைகளை நடத்தும் போது, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார “ இது கோத்தாவின் வேலை” எனக் கூறியதாக கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுகதபால தெரிவித்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் இதனை கூறியுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட தாக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் ஆகியவற்றை ஒரே குழுவே நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் பயன்படுத்திய தொலைபேசிகள் மூலம் கிடைத்த தகவல்களுக்கு அமைய ஊடகவியலாளர்கள் கீத் நொயார் மற்றும் உபாலி தென்னகோன் ஆகியோரை ஒரே அணியே தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் நடந்த ஊழலை வெளியிட்டதன் காரணமாகவே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

Latest Offers