கோத்தபாய தயார் என்றால் நானும் தயார்: தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச மக்கள் தயார் என்றால் தான் தயார் என் கூறியது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் என்ற கருத்தில் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் தயார் என்றால் நான் தயார் என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பணிகளை செய்ய நானும் தயார். வேட்பாளராக போட்டியிட தயார் என்று கோத்தபாய கூறவில்லையே.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து குழப்பமடைய தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியை போல எமது கட்சியும் யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்ற பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதியும் இது சம்பந்தமாக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers