நிரூபிக்க முடியாமல் தவிக்கும் ரணில்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடிந்தபோதும் தற்போது, அரசாங்கத்துக்கு வந்த பின்னர் அதனை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர், அரசாங்கம் என்பது உடையும் பல்லின் நிலைமையில் தான் இன்று இருக்கிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்கட்சியில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபித்துக்கொள்ள முடிந்தபோதும் தற்போது, அரசாங்கத்துக்கு வந்த பின்னர் அதனை நிரூபிக்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.

இத்தகைய நிலமை நீடித்தால், 2015 ஆம் ஆண்டில் 47 உறுப்பினர்களுடன் பிரதமராக இருந்ததைப்போன்றே தொடர்ந்தும் இருப்பார் .எனவே, இன்று எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச இந்த பதவியில் நீடித்து இருக்கக்கூடாது என்று தாம் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Latest Offers