பிரதான அமைச்சரொவருவரை பதவி விலகுமாறு கோரும் எதிர்க்கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

சேனா புழுவை கட்டுப்படுத்த முடியாது போனால், விவசாய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இந்த கோரிக்கையை நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விடுத்துள்ளார்.

சேனா புழு காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் சோள பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை உரிய வகையில் கட்டுப்படுத்தாவிட்டால், பாரிய பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.