ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலைகளினால் முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலேயாகும்.
நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அண்மை காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.