26ஆம் திகதி கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் செயற்குழு

Report Print Rakesh in அரசியல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு, ஆமர் வீதி - விறைட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், தேசிய மாநாடு நடத்தும் தினம் பற்றியும் தீர்மானிக்கப்படும்.

இதேவேளை, கட்சி கிளைகள் அமைப்பு, மகளிர், இளைஞர் முன்னணி தொடர்பான முன்னெடுப்புகள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.