மைத்திரியின் தோல்வியை உறுதி செய்த மஹிந்த!

Report Print Steephen Steephen in அரசியல்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது பிரதமர், அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என மூன்று சந்தர்ப்பங்களில் மஹிந்த கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தன்னிடம் மஹிந்த கூறியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றி பெற முடியாது எனவும் மஹிந்த கூறியதாக ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார்.