புதிய ஜனாதிபதி தெரிவானாலும் நாடாளுமன்றத்தின் நெருக்கடியை தீர்க்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தாலும் நாடாளுமன்றத்தில் காணப்படும் நெருக்கடியை தீர்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கதைக்கும் அத்தியாவசியம் தற்போது இல்லை. ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடக்கும் என்ற அடையாளமும் தென்படவில்லை.

தமக்கு சாதகமான நிலைமை இருக்கின்றது என்று எண்ணுவதன் காரணமாகவே ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருகிறது.

நாடாளுமன்றத்திலேயே பிரச்சினை இருக்கின்றது. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவாகினாலும் நாடாளுமன்றத்தில் உள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.