தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து கொண்ட உடன்படிக்கை என்ன? வெளிப்படுத்தும் சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவித உடன்படிக்கையும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நாட்டை கூட்டமைப்பிடம் ஒப்படைக்க முயற்சிப்பதாக எதிர்த் தரப்பினர் பலவிதமாக குற்றம் சுமத்துகின்றனர்

நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு நாங்கள் ஒரு போதும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களிடம் ஒரு கோரிக்கை விடுத்தது.

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை மீள ஒப்படைத்து வீடு நிர்மாணித்தல், சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து தரப்பிலும் அபிவிருத்தி செய்யுமாறு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.