சுதந்திரக் கட்சியின் 50 தொகுதி அமைப்பாளர்களை நீக்க திட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சிக்குள் பேதங்களை ஏற்படுத்தியமை உட்பட சில குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 தொகுதி அமைப்பாளர்களை நீக்க கட்சியின் தலைமை தயாராகி வருவதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்காதவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இவ்வாறு தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட நேரத்தில், இவர்கள் கட்சியில் இருந்து விலகாது, கட்சியை பாதுகாத்த நபர்கள் என பேசப்படுகிறது.

ஒக்டோபர் 26ஆம் திகதி பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் பலி கொடுத்து விட்டதாக தொகுதி அமைப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவர்களை தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.