ஜனாதிபதி வேட்பாளர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டும்: சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நாடு அதற்காக தயாராக இருப்பதாகவும் பெருநகரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். படித்த, புத்திசாலிகளே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும்.

நாட்டில் திறமையான படித்த பலர் உள்ளனர். அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கவே நானும் முயற்சித்து வருகின்றேன்.

இதனால், யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது முக்கியமல்ல. அவர் எப்படிப்பட்டவர் என்பதே முக்கியமானது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers