சந்திரிக்காவையும் பதவியிலிருந்து நீக்க முடிவு?

Report Print Murali Murali in அரசியல்
851Shares

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் பறிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சித்ததாகக் கூறப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட சந்திரிகா குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைப்பதில் சந்திரிகா குமாரதுங்க கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

எனினும், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியை அடுத்து சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதனால் பொது மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.