விசேட அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ள ஜனாதிபதி!

Report Print Steephen Steephen in அரசியல்

பதவிக்காலம் முடியாத மேல், தென் மற்றும் ஊவா ஆகிய மாகாண சபைகளையும் கலைத்து, 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமான விசேட அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பணிகளை துரிதப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.