தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் ஊடாக மக்களின் கவலைகளை தீர்க்க முடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.

வடக்கு மக்களின் உடனடித் தேவைகளுக்கான முக்கியமானதே அபிவிருத்தி தான். அதனை முன்னின்று வழி நடத்திச் செல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது. அது தொடர்பில் அவர்கள் சரியான முடிவினை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.