அரசியலமைப்புச் சட்ட கதை உதைப்பந்தாக மாறியுள்ளது: ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் இருக்கின்றனவே தவிர புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 14 ஸ்டேடியம் கம பகுதியில் அறநெறி பாடசாலையை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதைப் பந்ததாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

செய்ய வேண்டியது இந்த அறிக்கை பற்றி விவாதிப்பதல்ல எனவும் அனைவரும் இணைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை உருவாக்க வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உட்பட அனைத்து இன மக்களின் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு, சகவாழ்வுடன் கூடிய நாட்டை கட்டியெழுப்பும் வகையில், புதிய நாட்டை உருவாக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்காக சகல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.