தமிழ் பேசும் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும்! மகிந்தவின் சகா கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசும் தமிழ் மொழி தொடர்பில் தெளிவு பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போது நாட்டில் காணப்படுகின்ற சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெற வேண்டும். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.