10 ஆண்டு ஐ.தே.கட்சியே ஆளும்: அகில விராஜ்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 10 ஆண்டுகள் நாட்டை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்யும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பண்டுஸ்நுவர தொகுதியின் கட்சி அதிகார சபைக் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தாவும் குரங்குகள் இருந்தால், அவற்றை கூட்டில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் அப்படியில்லை என்றால், அந்த பக்கம் தாவக் கூடும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் ராஜபக்சவினருக்கு அடிமையான சிலர் இருக்கின்றனர். ராஜபக்ச பெயரை கேட்டால் அஞ்வோரும் இருக்கின்றனர் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.