நான்காம் திகதி விடுதலையாகின்றார் ஞானசார தேரர்?

Report Print Murali Murali in அரசியல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்தோ ஞானசார தேரர், எதிர்வரும் 4ஆம் திகதி, ஜனாதிபதியால் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி துமிந்த திஸாநாயக்க இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தேரரை, நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேரரின் விடுதலை குறித்து, ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

நாட்டு மக்களுக்காகவும் சிங்கள பௌத்தர்களுக்காகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் என்று, அவர் செய்த சேவைகளைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தினத்தன்று, அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.