தமிழில் பேசிய மகிந்த! பிரதமர் ரணில் மனம் விட்டுபாராட்டு

Report Print Murali Murali in அரசியல்

எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தைப்பொங்கல் தினத்தைமுன்னிட்டு தமிழ்மொழியில் வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார். அது சிறப்பானதும் பாராட்டுக்குரியதுமான செயல் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை காலி - யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட வேண்டும் என மகிந்த குறிப்பிட்டிருந்தார்.

நாமும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம். நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான யோசனைகளை ஒருபோதும் முன்வைக்கமாட்டோம். என்னுள் எவ்வித மாற்றமும் இல்லையென சிலர் விமர்சிக்கின்றனர்.

அன்று முதல் இன்றுவரை ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்ந்து பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என நம்புகின்றேன்.

இந்நிலையில், அரசியலமைப்பிற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தீர்மானிப்பது கட்சி தலைவர்களின் பொறுப்பு” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.