சாஸ்திரம் பார்ப்பதை விடுங்கள்! எனது நிலைப்பாடு இதுதான்- சுமந்திரன் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு இருக்கிறதா? இல்லையா? அல்லது வெற்றி பெறுமா? என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை மகிந்த ராஜபக்ச தரப்பினர் மட்டும் எதிர்க்கவில்லை. மாறாக ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் சிலரும் எதிர்க்கின்றார்கள் என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தது. இது தொடர்பில் பேசிய சுமந்திரன்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்ற எதிர்ப்பு என்று அவர் சொல்லுவது, வீணாக இதனை தலையில் சுமந்துகொண்டு தேர்தலில் தோற்று விடுவோமோ என்கின்ற பயமே அந்த கட்சிக்குள்ளே பலருக்கு இருக்கிறது.

ஆனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளோம்.

எனவே இதற்கு ஆதரவு இருக்கிறதா? இல்லையா? அல்லது வெற்றி பெறுமா? என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு என்றார்.