அஹிம்சாவை இலங்கைக்கு வந்து தம்மை சந்திக்குமாறு கோரும் கோத்தபாய

Report Print Ajith Ajith in அரசியல்

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார் என்று தெரிய வேண்டும் என கேள்வி எழுப்பும் அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க, இலங்கைக்கு வந்து தம்மை சந்தித்தால் என்ன நடந்தது? என்பதை கூற முடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எனது தந்தைக்கு என்ன செய்தார்கள், ஏன் செய்தார்கள்” என்று கேள்வி எழுப்பி ஜனவரி 8ஆம் திகதி தமது தந்தையின் 10ஆவது நினைவு தினம் அன்று அஹம்சா விக்ரமதுங்க எழுதியிருந்த கட்டுரை பரவலாக பேசப்பட்டது.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமது தந்தையை கொலை செய்தவர்கள் தொடர்பில் தெரிந்திருந்தால் ஏன் அதனை கோத்தபாய ராஜபக்ச, சீஐடியிடம் வெளியிடக்கூடாது என்று அஹிம்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத்நோயர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்தயிடம், தமது தந்தையின் கொலை தொடர்பான விசாரணைகளை சீஐடி ஆரம்பித்த நிலையில் திரிபோலியில் உள்ள தூதுவரை திருப்பிழைத்த கோத்தபாய, அந்த இடத்துக்கு பிரபாத் புலத்வத்தையை நியமித்தார்.

இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அஹிம்சா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உயிருக்கு ஆபத்து காரணமாகவே தாம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக குறிப்பிட்டுள்ள அஹிம்சா, 200 இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கோத்தபாயவை போன்று தமக்கு வாழமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.