மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யாவிட்டால்... மஹிந்த தெரிவித்துள்ள விடயம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்ய விரும்பாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக ஆசனங்களை பெற முடியும் என்பதன் காரணமாகவே இதனை கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்காது பொது அணியாக செல்வதில் எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்தவரையில் அதில் ராஜபக்ச சகோதரர்களே முன்னிலை பெறுவதாகவும் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.