எஞ்சியுள்ள மூன்று மாகாணசபைகளையும் விரைவில் கலைக்க தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

கலைக்கப்படாமல் எஞ்சியுள்ள ஏனைய மூன்று மாகாணசபைகளும் விரைவில் கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு ஒரே தினத்தில் ஒன்பது மாகாணசபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இது தொடர்பிலான விசேட அமைச்சரவை பத்திரமொன்றை ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸிற்கான விஜயத்திற்கு முன்னதாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆறு மாகாணசபைகளின் பதவி காலம் பூர்த்தியாகி அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைகள் விரைவில் கலைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பகுதி பகுதியாக தேர்தலை நடத்தாது ஒரே தடவையில் அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தலை துரித கதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.