ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை முடித்து கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

ஐந்து நாள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்திருந்தார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுட்ரேவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளைய தினம் முல்லைத்தீவுக்கான விஜயத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.