எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரில் பிரபலமான நபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த 5 பேரில் ஒருவரை ரெிவு செய்யும் போது, அது மோதலுக்கு வழிவகுக்காதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, இறுதி முடிவுக்கு அனைவரும் இணங்குவது கட்டாயம் நடக்கும் என கூறியுள்ளார்.
அத்துடன் எதிரணி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை காண ஆசைப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்கவை தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேறு வேட்பாளர்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.